கிழம்
அதிகாலை கடைதிறந்து வைத்திருக்கும் நேரமாயிற்று, சில மணி நேரத்திற்குப்பிறகு வாடிக்கையாளர்கள் வரத்தொடங்குவர், அதற்குமுன் காலை செய்யப்படவேண்டிய உணவுவகைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கவேண்டும். கடை திறந்தவுடன் முதன்முதலில் சமையல் செய்பவர்கள், சமையல் உதவியாளர்கள் வந்து விடுவார்கள். அடுத்து மற்ற வேலைசெய்யும் வேலையாட்களும் வந்து விடுவர். அப்பகுதியில் உள்ள பல உணவகங்களில் இதுவும் ஒன்று. அப்படியொன்றும் விசேஷமான உணவகம் கிடையாது, ஆயினும் லாபகரமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பெயரளவில் மட்டுமே அது செட்டிநாட்டு உணவகம். இன்று இன்னும் கடை திறக்கப்படவில்லை.
"இந்த கெழவன் இன்னவும் கடைய திறக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?" என்று புலம்பிக் கொண்டிருந்தான் முதலில் வந்த இருவருள் ஒருவனான தலைமை சமையல்காரன். இரண்டு மூன்று தடவை கடை ஷட்டரை தட்டியும் பயனில்லை.
"செல்வோ, பசங்களுக்கு போன் போடு. கட சாவி இருக்கான்னு கேளு"
கைபேசியில் சில நொடிகள் பேசிவிட்டு "சாவி இல்லையாம்" என்றான் செல்வம்.
"முதலாளிக்கு போனப் போடு"
செல்வம் முதலாளியைக் கைபேசியில் அழைத்தான் "முதலாளி போன் எடுக்கல" என்றான் .
"செவுட்டுக் கெழவனோட ரோதனையா போச்சு, இப்ப என்ன செய்ய?"
கடையை அதிகாலை விடியும் முன் ஊழியர்கள் வரும் வேளையில் திறந்துவைப்பது மாணிக்கத்தின் வேலை. பெரியவர். அவரின் ஊர் ஏதோ ஒரு கிராமமாம். இந்த கடையில்தான் வேலை செய்கிறார். வேலை செய்கிறார் என்பதைவிட அடைக்கலம் புகுந்திருக்கிறார் என்றே கூறலாம். கடைக்கு வேலைக்கு சேர்ந்த மூன்று ஆண்டுகளாகவே அவருடைய வயது என்பது. மாணிக்கத்தின் பிரத்தியேக வேலை கடையைக் கூட்டி, தரையைக் கழுவி சுத்தம் செய்வது, எச்சில் இலை எடுத்து டேபிள் சுத்தம் செய்வது, கழிவறையை சுத்தம் செய்வது. உணவு, உறக்கம் அனைத்தும் கடையில் தான். இரவு கடையை அடைத்துவிட்டு உள்ளே இவர் தூங்குவார். அப்படியொன்றும் அசந்துபோய் தூங்கிவிடமாட்டார், படுத்துக்கொண்டே கண்விழித்திருப்பார். சில மணித்துளிகள் தன்னை மறந்து தூங்கிவிடுவார். மீண்டும் கண் முழிப்பார். இப்படித்தான் பெரும்பாலான இரவுகளை மாணிக்கம் கடந்து செல்வார். என்ன காரணத்தினாலோ இன்னவும் மாணிக்கம் எழுந்து கடையை திறக்கவில்லை.
சமையல் பணியாளர்களைத் தொடர்ந்து இதர வேலையாட்களும் வந்து சேர்ந்து விட்டார்கள். அனைவரும் அவரவர் பங்கிற்கு ஷட்டரை தாட்டிப் பார்த்தார்கள், பயனளிக்கவில்லை. அவர்களுள் சோமுவிடம் சாவி இருந்தது. அவர்தான் கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்குவது, எரிவாயு, மின்சாரம், மேற்பார்வை, வேளைக்கு ஆள் பிடிப்பது, இன்னும் இதர இலாக்காக்களைப் பார்த்துக்கொள்வார். தனியாக ஒரு உணவகத்தையே வைத்து நடத்தத் திறன் வாய்ந்தவர். நல்ல வேளை போதுமான முதலீடு இல்லாத காரணத்தால் முதலாளிக்குப் பணியாளராய் பணியாற்றுகிறார்.
"சாவிய வச்சு ஒன்னும் பண்ண முடியாது, பெருசு உள்ள தாழ் போட்டுகிடும்." என்று கூறிவிட்டு சோமு மூடிய ஷட்டருக்கு அருகில் சென்று குனிந்து ஆராய்ந்து பார்த்தார் அவர் நினைத்தபடியே ஷட்டர் உள்ளே தாழிட்டு இருந்தது, தன் முழு பலத்தையும் பயன்படுத்தி ஷட்டரை மேலே தூக்கப் பார்த்தார், முடியவில்லை.
"ஐயாவுக்கு கூப்பிட்டிங்களா?"
"ஆமா கூப்பிட்டோம், போன் எடுக்கல." என்றான் தலைமை சமையல்க்காரன்.
சோமு, தானும் கைபேசி எடுத்து முதலாளியை அழைத்தார். எடுக்கவில்லை. இந்நேரத்தில் அழைத்தால் அவர் இணைப்பில் வரமாட்டார் என்பது சோமுவிற்குத் தெரியாத ஒன்றல்ல.
"ரவி, போய் ஐயா கிட்ட விஷயத்தை சொல்லு"
ரவி கிளம்ப யத்தனித்தான்.
"நில்லு. நீ வேண்டாம். சேகர், நீ சொல்லப்போ"
என்று சோமு சேகரை அனுப்பிவைத்தார். ரவியைக் காட்டிலும் சேகர் நல்ல முதலாளி விசுவாசி. முதலாளி வீடு பத்து நிமிட சைக்கிள் பயணம். சேகர் கிளம்பினான்.
நரைத்த கண் இமை ரோமங்கள். இரும்பு தாயக்கட்டை போன்ற விரல்கள். மரவள்ளிக்கிழங்கு தோலுக்கும் இவர் சருமத்திற்கும் அப்படியொன்றும் வித்தியாசம் கண்டுபிடித்து விட முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பற்கள். போதுமான அளவு கண்பார்வை. சவரன் செய்யாத முகம். வளைந்த முதுகு ஆனால் கூன் இல்லை. மெலிந்த உடல், உறுதியான கால்கள். எதார்த்தப் பேச்சு. இந்த உணவகத்தில் வேளைக்குச் சேர்வதற்குமுன் ஏதோ ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தாராம். அங்கும் இதே வேலைதான்.
கடையில் வேலை செய்பவர்களுள் கல்லூரி செல்லும் வயதில் சில வாலிபர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் தான் மாணிக்கத்திற்கு நண்பர்கள். மற்றவர்களுக்கு மாணிக்கத்தை அவ்வளவாக பிடிப்பதில்லை. இவருக்கும் அப்படிதான். மாணிக்கத்தின் இளங்கூட்டாளிகளின் மத்தியில் இருக்கும்போது தான் புத்துணர்ச்சியாகக் காணப்படுவார். வாலிபர்கள் ஜாடை மாடையாகவும், குரலை உயர்த்தியும் மாணிக்கத்திற்குப் புரியும் படி பேசுவார்கள். தன்னுடன் பேச சிரத்தை எடுப்பதாலேயே அவர்களை மாணிக்கத்திற்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் அவர்களுக்கு பாலியல் ரீதியாக எழும் சந்தேகங்களைத் தீர்த்துவைப்பவராகவும் திகழ்ந்தார். அந்த இளங்கூட்டாளிகளில் ஒருவன் தான் முதலாளி வீட்டிற்குக் கிளம்பிச் சென்ற சேகர்.
சேகர் முதலாளி வீட்டையடைந்தான். சிறிது நேரம் கதவைத் தட்டினான். கலைந்த தலைமுடி, தலையை சொரிந்த கை, வாயில் கொட்டாவியோடு கதவைத் திறந்தார் முதலாளி. முதலாளியைப் பார்த்தவுடன் சேகர் சொல்லவந்ததைக் கூறிமுடித்து விட்டான். சில நொடிகள் கொட்டாவியால் செவிடான முதலாளியின் காதுகளில் ஒன்னும் விழவில்லை. கேட்கலானார்.
"என்னது?"
"மாணிக்க ஐயா இன்னும் ஷட்டர் தொறக்கல, என்ன ஆச்சுன்னு தெரியல. சோமு உங்கள வரச்சொன்னாரு"
"என்ன சொன்ன?"
"மாணிக்க ஐயா இன்னும் கடை தொறக்கல, என்ன ஆச்சுன்னு தெரியல. சோமு உங்கள வரச்சொன்னாரு"
"நேத்தெல்லாம் கெழவன் நல்லாத்தான இருந்தான்?"
"நல்லா தாங்க இருந்தாரு"
"சோமுகிட்ட சாவி இல்லையா?"
"உள்ள தாழ் போட்ருக்கு"
"பின்னாடிக் கதவு?"
"அதுவுந் தான்"
நின்றபடியே சிறிதுநேரம் யோசித்தார் முதலாளி.
"சரி, நீ போ. நான் கிளம்பி வர்றேன்"
மற்றவர்களைக் காட்டிலும் மாணிக்கத்திற்குச் சம்பளம் முகமிகக் குறைவு. மாணிக்கத்தின் அதிகபட்ச செலவே தனக்கு மருந்து மாத்திரை வாங்குவது, நேரம் கிடைக்கும்போது திரையரங்கு சென்று படம் பார்ப்பது அவ்வளவுதான். சொல்லப்போனால் இந்த சம்பளமே மாணிக்கத்திற்கு அதிகம்தான். மாணிக்கத்திற்கு உற்றார் உறவினர் என்று யாரும் கிடையாது. அடிக்கடி மாணிக்கம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தைப்பற்றியும் அவர் குடும்பத்தைப்பற்றியும் கூறுவது வழக்கம்.
முன்பு வேலைபார்த்த மருத்துவமனையில்தான் தானும், தன் மனைவியும் ஒன்றாக வேலைசெய்து வந்தனர். இருவருக்கும் ஒரே வேலை. மகேட்பேறு இல்லை. இல்லையென்று வருத்தப்படவுமில்லை. மருத்துவக்கழிவுகளால் ஏற்பட்ட தொற்று காரணமாக மனைவி இறக்க, மனைவியின் நினைவுகளால் அங்கிருந்து துரத்தப்பட்டு, உணவகத்தில் வந்து தஞ்சம் புகுந்தார். ஆயினும் தினமும் இரவு கடையை அடைத்துவிட்டு தூங்கும்முன் மனைவியுடன் பேசுவதைத் தன் அன்றாட நிகழ்வுகளுள் ஒன்றாக வைத்திருக்கிறார். நேற்று இரவும்கூட தன் மனைவியுடன் பேச மாணிக்கம் தவறவில்லை.
கனத்த இதயம், நடுங்கும் குரல், கண்களில் கண்ணீர் இவற்றுடன் இரக்கமற்ற தனிமையோடு, இருள் நிறைந்த அறையில் தன் படுக்கையில் அமர்ந்திருந்தார். எங்கேயோ மூலையில் ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்தின் 'டிக் ,டிக்' சத்தம் மாணிக்கத்தின் புலம்பலுக்குத் தன் மனைவியாய் இருந்து பதிலளித்தது. ஆனாலும் அந்த 'டிக் ,டிக்' சத்தம் கூட மாணிக்கத்தின் காதுகளை உரசவில்லை. புருவங்களை சுளித்து, உதடுகளை பிதுக்கி கதறியழுதவாறு மனைவியுடன் உரையாடினார்.
"ஏன்டி என்ன விட்டுட்டு செத்த?"
"நீ ஏன் இன்னும் சாகாம இருக்க?"
"நீ வா, என்னால இங்க இருக்க முடியல "
"நீ வா இங்க"
"நான் உன்ன முதல எப்ப பாத்தேன்னு நெனப்பிருக்கா?"
"இருக்கு"
"நீ என்ன சத்தியம் பன்னிக் குடுத்த? நெனப்பிருக்கா?"
"இருக்கு"
"என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்னு சொன்ன?"
"ஆமா, அதுக்கு?"
"அப்புறோம் ஏன் என்ன விட்டுட்டு போன?"
"டிக், டிக், டிக்"
"சொல்லு டி ஏன் போன?"
"டிக், டிக், டிக்"
"என்னால இந்த உலகத்துல தனியா இருக்க முடியல, நீ எங்கிட்ட வா" என்று விம்மி அழுத அழுகையின் ஓசையை அறையின் சுவர்கள் எதிரொலித்தது. வழிந்து கொண்டிருந்த கண்ணீரோடு படுக்கையில் மல்லாக்காகப் படுத்தார். இரண்டு கண்களின் பக்கவாட்டில் இருந்த பெருக்கெடுத்த கண்ணீர் வழிந்து சென்று இரண்டு காதுகளையும் உரசிற்று. மாணிக்கத்தின் கண் இமைகள் மெல்ல மெல்ல கண்களை மூடிற்று.
கடைக்கு வெளியே கூட்டம் கூடி விட்டது. அக்கம் பக்கத்துக் கடைக்காரர்கள், வழியில் போவோர், வருவோர் என அனைவரும் அங்கு காணப்பட்டனர். சேகர் வந்து சேர்ந்து சில நிமிடங்களில் முதலாளியும் வந்து சேர்ந்தார். தன் வண்டியை நிறுத்திவிட்டு மட மடவென்று நடந்து சென்று சோமுவை நெருங்கினார்.
"என்னாச்சு?"
"பெருசு உள்ள தாழ் போட்டுருக்கு" என்று கூறிவிட்டு முதலாளியின் காதின் அருகில் சென்று "பெருசு முடிஞ்சுதுன்னு நினைக்கறேன்" என்று கூறினான் சோமு.
முதலாளி பதிலேதும் அளிக்காமல் மீண்டும் மட மடவென்று நடந்து தன் வண்டியை நெருங்கினார். வீட்டில் இருந்து எடுத்து வந்துள்ள கடப்பாரையை வண்டியில் இருந்து 'சரக்' என்று உருவினார். கடப்பாரையைக் கண்டவுடன் சோமு ஓடிச்சென்று முதலாளியிடம் கடப்பாரையை வாங்கிக்கொண்டு ஷட்டரிடம் ஓடினான். ஷட்டரின் வலது முலையின் கீழ், வெளிப்புற தாழ்பாளுக்கு அடியில் உள்ள சிறிய சந்தின் வழியே கடப்பாரையை விட்டு நெம்பி உள்ளே உள்ள தாழைப்பிளக்க முயற்சி செய்தான். எதிர் பார்த்ததைவிட கடினமான காரியமாக இருந்தது.
'கடக், கடக்' என்று சத்தம், அதைத் தொடர்ந்து ஷட்டர் திறக்கப்பட்டது. கையில் இருந்த கடப்பாரையை கீழே போட்டு விட்டு ஷட்டரை திறந்தது யார் என்று நிமிர்ந்து பார்த்தான் சோமு. மாணிக்கம் உள்ளிருந்து திறந்திருக்கிறார். தனக்கு முன் தென்பட்ட கூட்டத்தைக் கண்டு மலைத்துப்போய் நின்றார் மாணிக்கம். சில நிமிடங்கள் உடல் செயலாற்றுப் போனது. இன்று தான் தாமதமாக எழுந்தது மாணிக்கம் அறிந்த ஒன்றே. அனால் இவ்வளவு தாமதமானதை மாணிக்கம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னால் ஏற்பட்ட விளைவுகளை எண்ணி நின்றபடியே அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
"செவுட்டுக் கெழவா, நீ இன்னும் சாகலாய? இன்னைக்கு வேலையே போச்சு போ." என்று எல்லோரையும் முந்திக் கொண்டது தலைமை சமையல்காரனின் குரல்.
பின்பு நாலாபுறமிருந்தும் நிந்தனைகள். அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப திட்டி முடிந்தாகிவிட்டது. முதலாளி மட்டும் ஒன்றும் பேசவில்லை சலசலப்பு ஓய்ந்தபின். "சரி, சரி, எல்லாரும் போய் வேலைய பாருங்க" என்றார் முதலாளி உரக்கத் தொனியில்.
ஒருவர்பின் ஒருவர் கடையின் உள்ளே சென்று தத்தமது வேலைகளைச் செய்யத் தொடங்கினார். முதலாளி மட்டும் தன்னை ஒன்றும் கூறாதது மாணிக்கத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் இன்று முதல் மாணிக்கத்திற்கு பதவி உயர்வு.
இரவு கடையை அடைத்து சாவியை இடுப்பில் இறுக்கிக் கட்டிக்கொண்டு. ஒருபுறம் கேட்காத காதுகளுக்காக வானொலி, மறுபுறம் கொசுவர்த்தி. நடுவில் கம்பளி போர்த்திப் படுத்துக்கொண்டார், கடைக்கு வெளியே.

Awesome imagination.. Waiting for more stories..
ReplyDeleteThanks Giri!! Sure. :)
Delete