Posts

Showing posts from 2018

Facing the face

    Of late I get more frustrated particularly when dealing with people. I like everyone talking about me but not when they talk something which is not so good in me. Now, hearing the conversation I could clearly see things are not going in my way, wish I could interrupt them, because if I keep ignoring such things it may go worse in near future. I have to do something to stop it. I decided to make it clear and explain everything, this is the last chance I got to make them understand my position.     I took a deep breath walked vigorously and stood in front of my family. All of a sudden, after seeing me standstill in middle of the hall, they cut the conversation and glanced at me questioningly, seems like they didn’t expect me in here. I made eye contact with my family as though to warn them for upcoming stream of words. I busted out, told everything, everything what I prepared to say without giving any margin of chance for them to respond, words gushed from my mouth, delivered wha
Image
Thandhai Periyar/தந்தை பெரியார் தந்தை பெரியாரின் ஓவியம் Pencil Portrait of  "Thandhai Periyar" Ary by Arun Kumar Arunachalam

கிழம்

அதிகாலை கடைதிறந்து வைத்திருக்கும் நேரமாயிற்று, சில மணி நேரத்திற்குப்பிறகு வாடிக்கையாளர்கள் வரத்தொடங்குவர், அதற்குமுன் காலை செய்யப்படவேண்டிய உணவுவகைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கவேண்டும். கடை திறந்தவுடன் முதன்முதலில் சமையல் செய்பவர்கள், சமையல் உதவியாளர்கள் வந்து விடுவார்கள். அடுத்து மற்ற வேலைசெய்யும் வேலையாட்களும் வந்து விடுவர். அப்பகுதியில் உள்ள பல உணவகங்களில் இதுவும் ஒன்று. அப்படியொன்றும் விசேஷமான உணவகம் கிடையாது, ஆயினும் லாபகரமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பெயரளவில் மட்டுமே அது செட்டிநாட்டு உணவகம். இன்று இன்னும் கடை திறக்கப்படவில்லை. "இந்த கெழவன் இன்னவும் கடைய  திறக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?" என்று புலம்பிக் கொண்டிருந்தான் முதலில் வந்த இருவருள் ஒருவனான தலைமை சமையல்காரன். இரண்டு மூன்று தடவை கடை ஷட்டரை தட்டியும் பயனில்லை. "செல்வோ, பசங்களுக்கு போன் போடு. கட சாவி இருக்கான்னு கேளு" கைபேசியில் சில நொடிகள் பேசிவிட்டு  "சாவி இல்லையாம்" என்றான் செல்வம். "முதலாளிக்கு போனப் போடு" செல்வம் முதலாளியைக் கைபேசியில் அழைத்தான்  "ம

நறுமண அழிப்பான்

       அங்கு சென்றாலே இவனுக்குக் குதூகலமும், களிப்பும் எங்கிருந்து வருகிறதென்றே தெரியாது ஆனால் எதனால் வருகிறதென்று அறியலாம். பலப்பல நிறங்களில் சிறிய, பெரிய பந்துகள், ரகரகமாக கண்ணைப்பறிக்கும் விளையாட்டு ஜமானங்கள், நிறம் மாறும் வண்ண வண்ண மின்விளக்குகள், வீட்டு அலங்காரப்பொருட்கள், அடுக்கிவைக்கப்பட்டுள்ள நோட்டுகள், கலர் பேப்பர்கள், பென்சில், பேணா என சொல்லிக்கொண்டே போலாம். இவை ஒருபுறமிருக்க பொட்டு, வளையல், மை, ரிப்பன், என பெண்களுக்குத் தேவையான பொருட்கள் மறுபுறம். பேன்சி  ஸ்டோரைத் தொட்டடுத்து ஒரு வீடு, அதுதான் கடை வைத்திருக்கும் கடைக்காரம்மாவின் இல்லம். " உள்ள வந்து அதையுமிதையும் கேக்கக்கூடாது. அம்மா பென்சில் மட்டுந்தான் வாங்கிக் குடுப்பேன் "  என்று கூறியபடியே அன்புவை பேன்சி  ஸ்டோருக்குள் அழைத்துவந்தாள். "ஒரு பென்சில் குடுங்க மா? இவனுக்கு வாரம் ஒரு பென்சில் வாங்கவேண்டியதா இருக்கு." கடைக்காரம்மா தன் பின்னால் திரும்பி அங்கு அடுக்கிவைக்கப்பட்டுள்ள பல அட்டை பாக்ஸ்களிலிருந்து ஒன்றை எடுத்துத் திரும்பினார். தன்முன்னால் இருந்த கண்ணாடி மேஜையில் அந்த பாக்ஸை வைத்துத் திறந்தார

பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்

பட்டிமன்ற தலைப்பு : மனிதனுக்கு அதிக சுகம் தருவது எது? இரவில் தூங்குவதா? பகலில் தூங்குவதா? நடுவர் கந்தகன் : வந்திருக்கும் அனைத்து மக்களுக்கும், ஊர் விழா கமிட்டி குழுவினருக்கும் எங்கள் பட்டிமன்றக் குழுவினரின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.  இரவின் குளிரையும் பொருட்படுத்தாமல் கம்பளியும்,  குல்லாவுமாய்க்  கண்ணப்படும் பாட்டி, தாத்தாக்களே, மாங்கல்ய வரி  கட்டி எமக்கு இம்மாதத்தை மங்கலமாக்கிய தாய், தந்தையரே, சும்மா பட்டிமன்றத்தை வேறு வழியில்லாமல் பார்க்க வந்திருக்கும்  இளசுகளே, இன்னும் சற்று நேரத்தில் தூக்கம் காணும் வண்டு, சிண்டுகளே உங்கள் அனைவர்க்கும் வணக்கம். வேலை, உணவு, உறக்கம் இப்படித்தான் நாம் ஆண்டாண்டுகாலம் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம். ஆதியில், வெறும் உணவும், உறக்கமும் தான் பின் நாகரிக மாற்றத்தால் வேலை வந்து ஒட்டிக்கொண்டது. நம்மால் தூங்காமல் இருக்கவே முடியாது. ஆமா வா? இல்லையா?...ஆனாதானே? இப்படியிருக்க, துக்கத்தைப்  பற்றி தான் நாம் இந்த பட்டிமன்றத்தில் பேசப்போகிறோம். தலைப்பு என்னவென்றால், "மனதனுக்கு அதிக சுகம் தருவது ஏது?  இரவில் தூங்குவதா? பகலில் தூங்குவதா?" அட