அங்கு சென்றாலே இவனுக்குக் குதூகலமும், களிப்பும் எங்கிருந்து வருகிறதென்றே தெரியாது ஆனால் எதனால் வருகிறதென்று அறியலாம். பலப்பல நிறங்களில் சிறிய, பெரிய பந்துகள், ரகரகமாக கண்ணைப்பறிக்கும் விளையாட்டு ஜமானங்கள், நிறம் மாறும் வண்ண வண்ண மின்விளக்குகள், வீட்டு அலங்காரப்பொருட்கள், அடுக்கிவைக்கப்பட்டுள்ள நோட்டுகள், கலர் பேப்பர்கள், பென்சில், பேணா என சொல்லிக்கொண்டே போலாம். இவை ஒருபுறமிருக்க பொட்டு, வளையல், மை, ரிப்பன், என பெண்களுக்குத் தேவையான பொருட்கள் மறுபுறம். பேன்சி ஸ்டோரைத் தொட்டடுத்து ஒரு வீடு, அதுதான் கடை வைத்திருக்கும் கடைக்காரம்மாவின் இல்லம். " உள்ள வந்து அதையுமிதையும் கேக்கக்கூடாது. அம்மா பென்சில் மட்டுந்தான் வாங்கிக் குடுப்பேன் " என்று கூறியபடியே அன்புவை பேன்சி ஸ்டோருக்குள் அழைத்துவந்தாள். "ஒரு பென்சில் குடுங்க மா? இவனுக்கு வாரம் ஒரு பென்சில் வாங்கவேண்டியதா இருக்கு." கடைக்காரம்மா தன் பின்னால் திரும்பி அங்கு அடுக்கிவைக்கப்பட்டுள்ள பல அட்டை பாக்ஸ்களிலிருந்து ஒன்றை எடுத்துத் திரும்பினார். தன்முன்னால் இருந்த கண்ணாடி மேஜையில் அந்த பாக்ஸை வைத்துத் திறந்தார