Posts

Showing posts from December, 2017

Innovation

Image
What hits your mind the moment when you hear the word INNOVATION? Well, most often we cannot control our mind and it my go out of the topic. I remember, it was in my college days I heard the word INNOVATION for the first time.  The moment when I hear INNOVATION this was the picture which came into my mind, yes Innova car!! By the end of this write up we will come to know.. What is the importance of Innovation or what is the need for Innovation,  What is Innovation is all about, What are all the barriers we have for Innovation, How we can grab the innovative ideas, And finally how to execute or implement our innovative ideas     Here in our marketing world there are few companies or brands which are very famous in the market years before. But now they all gone with the wind.  These are some of the companies who lost their market only because of lack of innovation.  On the other side we have hand full of compa...

Anger

I was travelling in MTC bus, wanted to go to Thiruvanmiyur. Gave hundred rupees note to the conductor to buy ticket. The moment I showed hundred rupees note, I saw horrifying facial expression from him. He gently opened his bag and showed it to me. I don’t have clue on why he is doing it at that moment. He shouted at me with frustration and anger. " Look, I don’t have any single penny for change, where will I go for change if everyone gives me hundred rupees note?" he said . Suddenly I understood the situation and told him " I have the change ".     …I gave change to him, thought he would become calm and leave me this time, but still he doesn’t felt to leave me. Again he started shouting at me, saying " Though you have the change, but you are not giving it ". I felt so embarrassed after buying the ticket. I saw here and there around the bus to find is there anyone watching me or not. Went and sat on in one seat, person si...

ஈசல்

வீதியில் சாமிகள் உலாவும் காலம் வருடத்தின் பொன்னான இவ்விரு மாதம் கடையில் கூட்டம் குறையவில்லை ஆனாலும் சற்றே குறைந்தது  வியாபாரம் மங்களமான மனை, மனநிறையுடன் மனைவி, மகிழ்வுற்ற மக்கள் குதூகலத்தில் கல்லீரல் சாமி சரணம்!!!

இரண்டு எலிகள்

ஆண் பெண் அடங்கிய நண்பர் கூட்டம் நாங்கள் ஒன்று கூடி விட்டால் போதும் சிரிப்பு... ஆரவாரம்... மகிழ்ச்சி... யாருக்கு மெசேஜ் என்றால் அத்தபொண்ணுக்கு என்பானிவன் இவளோ ஃபிரண்டுக்கு  என்பாள் திருமண பத்திரிகை கூறியது நீங்கள் காதலர்கள் என்று மலைத்து நின்றோம்!!! சொன்னால் என்ன குற்றமா? நாங்களென்ன பகடையா? அத்தனையும் போலியா? இனி நிறைந்த உணர்வு தொடருமா? எங்கள் கோபம் தான் தனியுமா? இருக்கவே இருக்கு... மன்னிப்பு என்ற மலிவான ஒன்று. உங்கள் நிலை அறிவோம் வாழ்த்து கூற மறவோம் வாழ்த்துகள்... Dated 12-Dec-2014

தனிமை

பாய் போல் வானம திலே நிலவு மேகம் மோகம் கொள்ளும் மெய் யரியா மானுடன்  கவிதை விடை தேடும் கேள்வி போன்று தோன்று மென்றும் இனணந்தே - தனிமை யன்றோ நிரந்தர மெங்கும் !

No Luck'மணன்

நான் சிறியேன் அகமுடையாள் அகம் அறியேன் என் அறிவிற்கு என் இளமை கூலியானது! காடானாலும் கட்டியவளுடன் நான்; கட்டியவளை கருத்தில் கொள்ளாத நீ என்று அண்ணனும் கேட்கவில்லை நான் எண்ணியும் பார்க்கவில்லை பிரித்த பாவமா அண்ணனை வாட்டியது!??                                         - Forced Bachelor Dated 12-Dec-2017

கரையாமல் போன தக்காளி

பாடம் படித்து கல்வி கற்கா அறம், அறிவு அறியா கப்பியடித்த மந்தைமுறையில் கற்றதும் காப்பியடிப்பதே அரசியல், சமூகநீதி, பகுத்தறிவு கற்றுத்தராத கல்வியில் பயின்ற மாணாக்கன் குழம்பில் கரையாமல் போன தக்காளி Dated 19-Aug-2017

நாடு

களை எடுக்கும் இடம் சிலை நாற்று நட்டும் இடம் நஞ்சு பாலை யாகும் சோலை கறை படிந்த கடற்கரை பாழாய் போன பாலாறு ஊழ்வினை எண்ணாத ஊழல் பாவம் செய்தது பாமரனோ? Dated Feb-25-2017

குறுங் கவிதைத் தொகுப்பு

இருவர்  பகிர்ந்தோம் ஒன்றானோம்                  ⇁✴↽ கவிதையின் ஆழமும் பிரபஞ்சத்தின் நீளமும் படைத்தவனே அறிவான்                  ⇁✴↽ வலை வீசித் தேடினோம் - வலையில் தேடுகின்றோம்↽ மணமக்களை!                  ⇁✴↽ என்னை நெகிழவைத்த அனேகர் ஆண்களே, நான் பெண்பாலாக இருப்பதனாளோ என்னவோ?   -கவிதை                   ⇁✴↽ ஒரு வீடு இரு TV கிரிகட் பார்க்கும் மகன் சீரியல் பார்க்கும் அம்மா குறைந்தது முரண் அதிகரித்தது சீரியல்.                    ⇁✴↽ பிறர் நோக்கு மாற்றானி டமிருந்து சிந்திப்போர்  செயலி னுண்மை நோக்கை அறிபவராவர்,  ஏனையோர்  கண்கள் திரவாது - பொருள் தேடுவோராவர்                     ⇁✴↽ சுருங்கியது ஞாலம்  மட்டும் அல்ல மனிதனின்  மனமும் தான்       ...

கட்டணமில்லா கடவுள்

சிறு அறைக்குள் சிலையாய் இருள் சூழ்ந்த இறையாய் நுழையமுடியா நுழைவாயிலில்  அடைந்து கிடக்கும் ஆண்டவா வெளியே நீ வா ! பார் இந்த பாரை! நீண்ட நெடு வரிசை, வழி நெடுக உண்டியல், காண கட்டணமும், அல்லல் அர்ச்சனையும்... உன்சிந்தைக்குத் தோன்றிற்றோ காரணம் என்னென்று ? உன் - அறையின் அளவே. Dated 24-Apr-2017

எச்சில்

அக்காவின் காக்காகடி கடலை மிட்டாய் மீதமான தங்கையின் இட்லி தம்பியால் கைவிடப்பட்ட பொரி கடலை நண்பனிடம் பிடுங்கித் தின்ற பூரி அப்பா கடித்துத் தந்த கரும்பு அம்மா தட்டில் ஒரு பிடி சோறு மனைவி கொடுத்த கடைசி வாய் ஐஸ்கிரீம் பாதி சுவைத்த குழந்தையின் பிஸ்கட் எச்சில்... அன்பின் கிளை! Dated 15-Dec-2014