இரண்டு எலிகள்

ஆண் பெண் அடங்கிய நண்பர் கூட்டம்
நாங்கள் ஒன்று கூடி விட்டால் போதும்
சிரிப்பு... ஆரவாரம்... மகிழ்ச்சி...

யாருக்கு மெசேஜ் என்றால்
அத்தபொண்ணுக்கு என்பானிவன்
இவளோ ஃபிரண்டுக்கு  என்பாள்

திருமண பத்திரிகை கூறியது
நீங்கள் காதலர்கள் என்று
மலைத்து நின்றோம்!!!

சொன்னால் என்ன குற்றமா?
நாங்களென்ன பகடையா?
அத்தனையும் போலியா?
இனி நிறைந்த உணர்வு தொடருமா?
எங்கள் கோபம் தான் தனியுமா?

இருக்கவே இருக்கு...
மன்னிப்பு என்ற மலிவான ஒன்று.

உங்கள் நிலை அறிவோம்
வாழ்த்து கூற மறவோம்
வாழ்த்துகள்...

Dated 12-Dec-2014

Comments