எச்சில்

அக்காவின் காக்காகடி கடலை மிட்டாய்
மீதமான தங்கையின் இட்லி
தம்பியால் கைவிடப்பட்ட பொரி கடலை
நண்பனிடம் பிடுங்கித் தின்ற பூரி
அப்பா கடித்துத் தந்த கரும்பு
அம்மா தட்டில் ஒரு பிடி சோறு
மனைவி கொடுத்த கடைசி வாய் ஐஸ்கிரீம்
பாதி சுவைத்த குழந்தையின் பிஸ்கட்
எச்சில்... அன்பின் கிளை!

Dated 15-Dec-2014

Comments

  1. ஆரம்பம் அருமை!!👌

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்து!! முதல் கமெண்ட் உன்னுடையது தான். :)

      Delete

Post a Comment